Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

12 வயது குழந்தை திருமணம். குற்றமலா. மலேசியாவின் புதிய சட்டம்

12 வயது குழந்தை திருமணம். குற்றமலா. மலேசியாவின் புதிய சட்டம்
, வியாழன், 6 ஏப்ரல் 2017 (05:25 IST)
உலகம் முழுவதும் குழந்தைகள் திருமணத்திற்கு எதிராக விழிப்புணர்வை சமூக நல ஆர்வலர்கள் ஏற்படுத்தி வரும் நிலையில்  12 வயதிலேயே குழந்தைகள் பக்குவமடைந்து விடுவதால், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமல்ல என புதிய சட்டம் ஒன்றை மலேசியா அரசு இயற்றியுள்ளது. இதனால் குழந்தைகள் திருமணத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்து வருபவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.



 


இதுகுறித்த விவாதம் ஒன்று மலேசிய பாராளுமன்றத்தில் நடந்தபோது மலேசிய எம்பி ஒருவர் கூறியதாவது: தற்போதைய காலத்தில் சிறுமிகள் 9 அல்லது 12 வயதிலேயே பருவமடைந்து விடுவதோடு உடல் மற்றும் மனோரீதியாக அவர்கள் திருமணத்திற்குத் தயாராகி விடுகின்றனர். இந்த காலகட்டத்தில் அவர்கள் 18 வயது பெண் போலவே காட்சியளிப்பதால் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில் தவறு இல்லை. திருமணத்திற்கு வயது ஒரு தடையாக இருக்கக்கூடாது

ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த சட்டத்தை பாராளுமன்றத்தில் ஆதரிக்க மறுத்துவிட்டனர். இருப்பினும் இந்த சட்டம் மலேசிய பாராளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாஜக முதல்வருக்கு ராகுல்காந்தி பாராட்டு