Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரு புரட்சியாளனின் வாழ்வில் - முக்கிய நாட்கள்

ஒரு புரட்சியாளனின் வாழ்வில் - முக்கிய நாட்கள்
, சனி, 26 நவம்பர் 2016 (15:21 IST)
மறைந்த கியூபப் புரட்சியின் தளபதி, ஃபிடல் காஸ்ட்ரோ குடல் உபாதை காரணமாக 2006ல் தனது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோவிற்கு தற்காலிகமாக தனது அதிகாரங்களை வழங்கினார்.


 

பின்னர் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, ரவுல் காஸ்ட்ரோ முழுமையாகப் பதவிப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

உலக வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் ஃபிடல் காஸ்ட்ரோவின் வாழ்க்கையில் இருந்து சில முக்கிய துளிகள்

1926 : கியுபாவின் தென் கிழக்கு மாநிலமான ஓரியண்ட் மாகாணத்தில் பிறப்பு.

1953: பட்டிஸ்டா அரசுக்கு எதிராக நடத்தி தோல்வியில் முடிந்த கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய பிறகு சிறை வைப்பு

1955: பொது மன்னிப்பின் கீழ் சிறையிலிருந்து வி்டுதலை

1956: செ குவெராவுடன் இணைந்து அரசுக்கு எதிராக கெரில்லாப் போர் தொடக்கம்.

1959: பட்டிஸ்டா அரசை தோற்கடித்து, கியுபாவின் பிரதமராகப் பதவியேற்பு.

1961: கியூபாவிலிருந்து வெளியேறி நாடுகடந்த நிலையில் இருந்தவர்களால், அமெரிக்க உளவு நிறுவனமான, சி.ஐ.ஏ.வின் உதவியுடன் நடந்த ‘பன்றிகள் குடா’ (Bay of Pigs) ஆக்ரமிப்பு தோற்கடிப்பு.

1962: சோவியத் ஒன்றியத்தின் ஏவுகணைகளை கியுபாவில் நிலைநிறுத்துவதற்கு உடன்பட்டதன் மூலம், அமெரிக்காவுடன் போர் மூள வைத்திருக்கக்கூடிய 'கியூபா ஏவுகணை நெருக்கடி' தூண்டப்பட்டது.

1976: கியூபாவின் தேசிய நாடாளுமன்றத்துக்குத் தேர்வு

1992: அமெரிக்காவுடன் கியூபா அகதிகள் தொடர்பில் ஒப்பந்தம் எட்டப்படுகிறது.

2008: கியூப அதிபர் பதவியிலி்ருந்து உடல் நலக் குறைவு காரணமாக காஸ்ட்ரோ பதவி விலகல்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நான் மறக்க முடியாத மாவீரர்களில் ஒருவர் ஃபிடல் காஸ்ட்ரோ- கருணாநிதி இரங்கல்