Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏலியனாக மாறி வரும் வாலிபர்: அதிர்ச்சியில் மக்கள்

Advertiesment
ஏலியனாக மாறி வரும் வாலிபர்: அதிர்ச்சியில் மக்கள்
, திங்கள், 3 ஏப்ரல் 2017 (15:41 IST)
கலிபோர்னியாவை சேர்ந்த 22 வயது வாலிபர் ஒருவர் ஏலியனாக மாற 110 அறுவை சிகிச்சை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரை சேர்ந்த வின்னி ஓ(22) என்ற  வாலிபர் ஏலியனாக மாற தீவிர முயற்சியில் ஈடுப்பட்டு வருகிறார். இதற்காக தற்போது வரை 50,000 டாலர் வரை செலவு செய்து 110 அறுவை சிகிச்சை செய்துள்ளார். இவர் ஒரு மேக்-அப் நிபுணர்.
 
17 வயது முதல் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறார். உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பையும் மாற்றி சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். தற்போது வரை சுமார் 50,000 டாலர் சிகிச்சைகளுக்காக செலவிட்டுள்ளார். இன்னும் சில மாதங்களில் ஆணுறுப்பு, மார்ப்பு காம்புகள், தொப்புள் உள்ளிட்ட அனைத்தையும் நீக்க முடிவு செய்துள்ளார். இதற்காக 1,60,000 டாலர் நிதியை திரட்டி வருகிறார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
 
15 வயது முதல் பாலியல் உறவில் விருப்பமில்லை. இதனால் பெண்ணாக மாறுவதை விட ஏலியனாக மாறுவது சிறந்தது என முடிவு செய்து மருத்துவர்களை சந்தித்தேன். பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகிறேன். கூடிய விரைவில் இந்த உலகத்தில் ஒரு புதிய உயிரினமாக தன்னை மாற்றிக்கொண்டு ஏலியனாக மக்கள் மத்தியில் வலம் வருவேன், என்றார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுவனிடம் தகாத உறவு வைத்திருந்த 21 வயது பெண் - கேரளாவில் அதிர்ச்சி