Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”அந்த” 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

”அந்த” 350 கோடி இந்தியாவுக்கே சொந்தம்.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Arun Prasath

, வியாழன், 3 அக்டோபர் 2019 (08:38 IST)
லண்டன் வங்கியில் இருந்த ஹைதராபாத் நிஜாமின் 350 கோடி ரூபாய் பணம், இந்தியாவுக்கே சொந்தம் என்று இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

பிரிட்டிஷ் இந்தியாவில் தனி தனி சமஸ்தானங்களாக இருந்தவைகளில் ஹைதராபாத்தும் ஒன்று. அப்போது அந்த ஹைதராபாத்தை ஆண்டு வந்தவர், நிஜாம் உஸ்மான் அலி கான். 1947 க்கு சுதந்திரம் பெற்ற சமயம் இந்தியாவை ஒன்றாக இணைக்கும் முயற்சியில் பல சமஸ்தானங்கள் ஒன்று சேர்க்கப்பட்டன. அப்போது நிஜாமிடமிருந்த 10 லட்சத்து 7 ஆயிரத்து 940 பவுண்ட் பணத்தை பாதுகாக்கும் முயற்சியில் அப்போதைய பாகிஸ்தானின் இங்கிலாந்து தூதர் ஹபிப் இப்ரகிம் ரகிம்துல்லாவுக்கு கைமாற்றினார்.

ரகிமதுல்லா அந்த பணத்தை லண்டனில் உள்ள நாட்வெஸ்ட் வங்கியில் இறுப்பு வைத்திருந்தார். தற்போது 70 ஆண்டுகளை கடந்து இந்த பணம் 35 மில்லியன் பவுண்டாக, அதாவது இந்திய ரூபாய் மதிப்புபடி சுமார் ரூ 350 கோடியாக தற்போது உயர்ந்துள்ளது.
webdunia

இதனிடையே இந்த பணம் தற்போது பாகிஸ்தானுக்கு சொந்தமா? அல்லது இந்தியாவைச் சேர்ந்த நிஜாமின் வாரிசுகளுக்கு சொந்தமா? என்று வழக்கு இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்துவந்தது. பாகிஸ்தான், நிஜாம் வழங்கிய பணம், நிதியாக ஆயுதம் வாங்குவதற்காக வழங்கப்பட்டது என வாதித்து வந்தனர். இந்நிலையில் தற்போது நிஜாமின் ரூ.350 கோடி பணம், அவரது வாரிசுகளான இளவரசர்களுக்கே சொந்தம் என இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் நிஜாம் வாரிசுகளின் சார்பாக இந்திய அரசும் கைக்கோர்த்திருந்தது. இந்த தீர்ப்பு முக்கியமான தீர்ப்பு என பலர் கூறிவந்தாலும், பாகிஸ்தானுக்கு இது மிகப்பெரிய பின்னடைவு என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தல் தூதுவராக நியமனம் செய்யப்பட்ட திடீர் கோடீஸ்வரி!