Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறந்த நிலையில் கரை ஒதுங்கும் உயிரினங்கள்: பேரிடரின் அறிகுறியா??

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2016 (10:56 IST)
இலங்கையில் வழக்கத்திற்கு மாறாக பாம்புகள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்குவதாக தெரியவந்துள்ளது.


 
 
இலங்கையின், மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பகுதியில் பாம்புகள் கரை ஒதுங்குவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
 
முக்குலியான் என அழைக்கப்படும் ஒருவகை பாம்புகள் உயிரிழந்து கரை ஒதுங்குகிறது. இந்த பாம்புகள் ஒரு அடி நீளத்திலிருந்து, இரண்டரை அடி நீளம் வரை காணப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர். 
 
இந்த பாம்புகள் கால நிலை மாற்றத்தினால் உயிரிழந்து கரையொதுங்கி இருப்பதாக மீன்வளத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
 
கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த சுனாமி பேரழிவின் போது இவ்வாறு இறந்த நிலையில் மீன்கள் மற்றும் பாம்புகள் கரை ஒதுங்கி இருந்தன.
 
தற்போதும் அதே போல பாம்புகள் கரை ஒதுங்குவதால் மீண்டும் ஒரு இயற்கை பேரிடர் ஏற்படலாம் என அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஸ்போர்ட் பெறுவதற்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம்.. வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு..!

14 வயது சிறுமியை திருமணம் செய்த 16 வயது சிறுவன்.. திருப்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

சூட்கேஸில் இளம் பெண் பிணம்.. ராகுல் காந்தி பாத யாத்திரையில் கலந்து கொண்டவர்..!

நான் ஆட்சியில் இருந்திருந்தா அறுத்து விட்ருப்பேன்! - வன்கொடுமை சம்பவங்கள் குறித்து அன்புமணி ஆவேசம்!

மும்மொழிக் கொள்கைக்கு மக்கள் ஆதரவு தறாங்க! அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்கவில்லை! - ஜி.கே.வாசன் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments