கடந்த சில மாதங்களாகவே ஆணுறுப்பில் கயிற்றை கட்டி மோட்டார் சைக்கிள், கார், பஸ் போன்ற வாகனங்களை இழுத்து சாதனை செய்து வரும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடந்து வருகிறது. இந்த நிலையில் சீனாவை சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது ஆணுறுப்பில் கயிற்றை கட்டி ஹெலிகாப்டர் ஒன்றையே சில அடிதூரம் இழுத்துள்ளார். அவருடைய சூப்பர் பவரை பார்த்து பலர் ஆச்சரியம் அடைந்தனர்.
கிழக்கு சீனாவை சேர்ந்த ஜிபோ என்ற 30 வயது இளைஞர் யே ஹோக்வி என்பவர் தான் இந்த சாதனையை செய்துள்ளார். கராத்தே, குங்பூ உள்பட பல தற்காப்பு கலைகள் பயின்ற இவர் புதிய முயற்சியாக தனது ஆணுறுப்பில் கயிற்றை கட்டி ஹெலிகாப்டரை இழுத்து சாதனை செய்துள்ளார். இவரை பவரை பார்த்து ஆச்சரியப்பட்ட பலர் இந்த சாதனையை புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து ஃபேஸ்புக், டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.
ஜிபோ ஹெலிகாப்டரை தனது ஆணுறுப்பால் 10 மீட்டர் வரை இழுத்துள்ளதாகவும், இதற்கு முன்னர் எட்டு மீட்டர் வரை இழுத்ததே சாதனையாக இருந்ததால் ஜிபோ உலக சாதனை செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது