Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகமே திண்டாடினாலும் கெத்து காட்டும் வடகொரியா: கிம் பெருமித பேச்சு!

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (08:31 IST)
வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை வடகொரியா வெற்றிகரமாக தடுத்துள்ளது என வடகொரிய அதிபர் பெருமிதம். 
 
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் அதிகரித்துள்ள நிலையில் தினமும் உலக அளவில் லட்சக்கணக்கானோர் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.  
 
அந்த வகையில் சற்றுமுன் வெளியான தகவலின்படி 1,11,81,818 பேர்களுக்கு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. மேலும் உலக அளவில் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62,92,023 உயர்ந்துள்ளதாகவும் கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,28,378 ஆக உயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
இந்நிலையில் கொரோனாவை ஊடுருவலை தடுத்தது குறித்து ஆளும் தொழிலாளர் கட்சியின் ஆட்சிக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு வடகொரிய அதிபர் பேசினார். அவர் கூறியதாவது, உலகளாவிய சுகாதார நெருக்கடி இருந்த போதிலும், வீரியம் மிக்க வைரஸின் ஊடுருவலை வடகொரியா வெற்றிகரமாக தடுத்துள்ளது. 
 
கொரோனா வைரஸை தடுக்கும் முயற்சியில் பிரகாசமான வெற்றி பெற்றுள்ளது வடகொரிய. அதேசமயம் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் சுயநிறைவு அடைந்து விட்டதாக கருதாமல், மக்கள் அதிகபட்ச எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு டாக்டர் கூடவா இல்ல? அடிப்பட்டு வந்த கஞ்சா கருப்பு! - அரசு மருத்துவமனையில் வாக்குவாதம்!

குழந்தைகள் பாதுகாப்பு உட்பட 28 அணிகள்.. பிரசாந்த் கிஷோரை சந்தித்த சில மணி நேரங்களில் தவெக அதிரடி!

பிரியங்கா தொகுதியான வயநாட்டில் நாளை கடையடைப்புக்கு அழைப்பு.. என்ன காரணம்?

ஏஐ தொழில்நுட்பத்தால் வேலை இழப்பு இருக்காது: ஏஐ உச்சிமாநாட்டில் பிரதமர் பேச்சு..

ஈபிஎஸ்-க்கு எதிராக காய் நகர்த்தும் செங்கோட்டையன்.. சசிகலா, ஓபிஎஸ், தினகரனுடன் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments