லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்கள் விடுதலை!
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏழு இந்தியர்கள் லிபியாவில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்
இந்தியாவை சேர்ந்த ஏழு இந்தியர்கள் கடந்த செப்டம்பர் 14ஆம் தேதியும் அந்நாட்டின் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டனர். இந்த நிலையில் கடத்தப்பட்ட ஏழு இந்தியர்களை மீட்க இந்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது
லிபியாவில் இந்திய தூதரகம் இல்லை என்பதால் அண்டை நாடான துனிசியா நாட்டின் இந்திய தூதரகம் மூலம் கடத்தி செல்லப்பட்ட இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டது
இந்த நிலையில் கடத்தப்பட்ட இந்தியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாக சற்றுமுன் துனிசியாவின் இந்திய தூதர் புனீத் ராய் குண்டல் அவர்கள் உறுதி செய்துள்ளார். மேலும் கடத்தப்பட்ட 7 பேரும் ஆந்திரா பீகார் குஜராத் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் விரைவில் அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன
லிபியாவில் கடத்தப்பட்ட 7 இந்தியர்களுடன் துனிசியாவின் இந்திய தூதர் புனீத் ராய் குண்டல் அவர்கள் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது