Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் அதை நக்க சொல்ல மாட்டோம்! – கே.எஃப்.சி திடீர் அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2020 (11:36 IST)
உலகளவில் பிரபலமான சிக்கன் உணவகமான கேஎஃப்சி பல ஆண்டுகளாக தங்கள் விளம்பரங்களில் இருந்த ஒரு வாசகத்தை நீக்கியுள்ளது.

உலகளவில் சிக்கன் உணவு வகைகளுக்கு மிகவும் பிரபலமாக உள்ள கேஎஃப்சி எனப்படும் கென்டுக்கி ஃப்ரைட் சிக்கன் நிறுவனத்திற்கு உலக நாடுகள் முழுவதும் ஆயிரக்கணக்கில் கிளைகள் உள்ளன. கே.எஃப்சி நிறுவனம் கடந்த 64 ஆண்டு காலமாக தனது விளம்பரங்களில் ”Finger Licking Good” என்ற ஸ்லோகனை உபயோகித்து வருகிறது.

தங்கள் சிக்கன் உணவு வகைகள் விரல்களை நக்க வைக்கும் என்ற ரீதியில் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்த இந்த ஸ்லோகனை தற்போது நீக்குவதாக கே.எஃப்சி அறிவித்துள்ளது. தற்போது கொரோனா காலத்தில் கைகளால் முகம், மூக்கு, வாய் போன்றவற்றையே தொடக்கூடாது என மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

இந்நிலையில் தங்களது ஸ்லோகன் கோவிட் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முரணாக இருப்பதால் நீக்குவதாக கே.எஃப்.சி கூறியுள்ளது. மேலும் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் பூரணமாக சரியானதும் மீண்டும் இந்த ஸ்லோகன் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக என்ன ப்ளான் பண்ணாலும், அதிமுககிட்ட நடக்காது! - அதிமுக அன்வர் ராஜா கருத்து!

ஒரு நாளைக்கு 10 மணிநேரம் வரை வேலை.. வணிக நிறுவன ஊழியர்களுக்கு புதிய விதி: அரசு உத்தரவு!

மேலும் 2 நாடுகளில் UPI அறிமுகம்.. பிரதமர் வெளிநாட்டு பயணத்தில் ஒரு புதிய மைல்கல்..!

கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி விவகாரம்: குற்றம் நடந்தபின் சரக்கடித்துவிட்டு சாப்பிட்டு பதட்டமின்றி சென்ற மிஸ்ரா..!

மக்களை காக்க, தமிழகத்தை மீட்க.. உங்களை காண வருகிறேன்! - எடப்பாடி பழனிசாமியின் எழுச்சிப் பயணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments