Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இங்கிலாந்து இளவரசருக்கு 3வது குழந்தை: மகிழ்ச்சியில் மன்னர் பரம்பரை

Advertiesment
இங்கிலாந்து இளவரசருக்கு 3வது குழந்தை: மகிழ்ச்சியில் மன்னர் பரம்பரை
, திங்கள், 23 ஏப்ரல் 2018 (19:10 IST)
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ்–டயானா தம்பதியரின் மூத்த மகனும் இளவரசருமான வில்லியம்ஸ் அவர்களுக்கு ஏற்கனவே 4 வயது ஜார்ஜ் மற்றும் 3 வயது சார்லோட் ஆகிய 2 குழந்தைகள் உள்ள நிலையில், இன்று அவருக்கு 3வது குழந்தை பிறந்துள்ளது. வில்லியம்ஸ் அவர்களின் மனைவி கேதே மிடில்டன் இன்று அழகான ஆண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளார்.
 
வில்லியம்ஸ்-கேதே தம்பதிக்கு 3வது குழந்தை பிறந்த இந்த தகவலை இங்கிலாந்து அரண்மனை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. மேலும் தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரும் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இன்று பிறந்துள்ள இந்த 3வது குழந்தை இங்கிலாந்து அரியணையில் ஏறும் வாரிசுகளில் 5வது இடத்தைப் பிடிக்கும் என்றும் அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்தன

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உணவகத்தில் நிர்வாணமாக துப்பாக்கி சூடு நடத்திய நபர்: 4 பேர் பலி