Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்கு இயந்திரம் வேண்டாம்: கமலா ஹாரிஸின் துணிச்சலான கோரிக்கை

Webdunia
வியாழன், 6 ஜூன் 2019 (13:29 IST)
அமெரிக்காவில் 2020-ல் வரவிருக்கும் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடும் கமலா ஹாரிஸ் வாக்கு இயந்திரம் வேண்டாம் என்று கோரிக்கை வைத்துள்ளார்.


இந்திய வம்வாசளியைச் சேர்ந்த அமெரிக்க வழக்கறிஞர் கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியா மாகாணத்தின் அரசு வழக்கறிஞராக பணியாற்றியவர்.

தற்போது 2020-ல் வரவிருக்கும் அமெரிக்க தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிடுவதற்காக நாமினேஷன் தாக்கல் செய்துள்ளார்.  இவர் வரவிருக்கும் அமெரிக்க தேர்தலில் “வாக்கு இயந்திரங்களுக்கு பதிலாக வாக்குச் சீட்டுகளை உபயோகிக்கவேண்டும்” என்று வலியுறுத்தி வருகிறார்.

மேலும் அவர், வாக்கு இயந்திரத்திரங்களை நீக்கிவிட்டு வாக்குச் சீட்டுகளை உபயோகித்தால் வெளிநாட்டிலிருந்து எதிரிகளால் ஹேக் செய்ய முடியாது எனவும், தேர்தலும் பாதுகாப்பாக நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 
 
இந்திய தேர்தலில் வாக்கு இயந்திரம் சம்பந்தப்பட்ட புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில் கமலா ஹாரிஸின் கோரிக்கை சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments