டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபர் என்பதை நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது என துணை அதிபர் கமலா ஹாரிஸ் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் அவர் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் கருத்துக்கணிப்பு தெரிவித்து வருகிறது.
இந்த நிலையில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்று வெள்ளை மாளிகைக்கு திரும்புவார் என்பதை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது.
அதனால் தான் நாடு முழுவதும் நான் அவருக்கு எதிராக பிரச்சாரம் செய்கிறேன். நாம் அனைவரும் பயப்பட வேண்டும், நம் குழந்தைகளின் எதிர்காலம் குறித்து பயப்பட்டால் டிரம்ப் அதிபராக கூடாது. ஜனநாயக கட்சியை மீண்டும் ஆதரிக்க கோரிக்கை விடுகிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.