Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போராட்டம் தொடரும்.. தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன்: கமலா ஹாரீஸ்..

Mahendran
வியாழன், 7 நவம்பர் 2024 (10:10 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் சமீபத்தில் வெளியான நிலையில், அதில் டொனால்ட் டிரம்ப் மிக அபாரமாக வெற்றி பெற்றார் என்பதும், இன்னும் ஒரு சில நாட்களில் அவர் அமெரிக்காவின் 47வது அதிபராக பதவியேற்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அனைத்து கருத்துக்கணிப்புகளும் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்று கூறிய நிலையில், அவர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். இதனை அடுத்து, அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் வெற்றி பெற்ற டிரம்பை தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன், ஆனால் அதே நேரத்தில் தேர்தலில் தோல்வி அடைந்தாலும் எனது போராட்டத்தில் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டிரம்பை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி உரையாடியுள்ளார். அதிபர் டிரம்பின் அற்புதமான வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு துறைகளில் இந்தியா-அமெரிக்கா உறவை வலுப்படுத்த எதிர்நோக்கி உள்ளேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், எரிசக்தி மற்றும் விண்வெளி துறைகளிலும் நெருக்கமாக இணைந்து இருவரும் பணியாற்றுவோம் என்று எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜாபர் சாதிக் சகோதரர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.. நீதிபதி முக்கிய உத்தரவு..!

யானை தாக்கி இருவர் பலி எதிரொலி: பக்தர்களுக்கு ஆசி வழங்க தடை..!

கூட்டணிக்கு வர்றவங்க எல்லாம் 50 கோடி, 100 கோடி கேட்குறாங்க: திண்டுக்கல் சீனிவாசன்

இன்றிரவு கனமழை பெய்யும் பகுதிகள்: சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு

‘அமரன்’ திரையிட்ட தியேட்டரில் குண்டு வீசிய 3 நபர்கள் கைது: தீவிர விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments