Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெறும் மேம்போக்கான விசாரணை ! சவூதி மீது டிரம்ப் காட்டம் !

Webdunia
செவ்வாய், 23 அக்டோபர் 2018 (13:33 IST)
பிரபல பத்திரிக்கையாளர் ஜாமல் கோசி கொலை குறித்து விசாரணை செய்து வரும் சவூதியின் செய்திகள் எதுவும் திருப்திகரமாக இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
பத்திரிகையளர் கொலை செய்யப்பட்டது மிகுந்த வருத்தமளிக்கிறது.இந்த விவகாரம் பற்றி விசாரணை செய்து வரும் சவூதி அரேபியாவின் செய்திகள் எவ்வளவு உண்மை என்று கூறாமுடியாது .இருப்பினும் அந்த தகவல்களை மறுக்கவும் முடியாது.மேலும் இந்த வழக்கின் தன்மையை ஆராயப்பட வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
 
ஜாமல் கொலையை முதலில் மறுத்து வந்த சவூதி அரசு பின் அவர் கொலை செய்யப்பட்டதை ஒப்புகொண்டது.
 
இதற்கு விளைக்கம் கொடுத்து கொடுத்து சவூதி அரேபிய அரசு கூறியதாவது:
 
துபாய் தூதரகத்தில் நடைபெற்ற வாகுவாதத்தில் ஜாமல்ம் கொல்லபட்டார் என மொட்ட மொழுக்காக காரனத்தை கூறிய போதிலும், இந்த வழக்கின் உணைமையை ஊர்ஜிதப்படுத்த வேண்டும் ,அதற்கு சௌதி அரேபிய அரசின்  ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.
 
சவூதியில் மன்னருக்கு எதிராக கருத்துக்கூறி அதை தன்  பத்திரிக்கையில் பிரசுரித்து வந்த ஜாமலுக்கு பல தடைகள் விதிக்கப்பட்டது. இதனையடுத்து தொலைக்கட்சியின் மக்களின் உரிமைக்காகவும் ,ஊடகத்தின் வலிமையை உணர்த்தி போராடிய ஜாமலின் துணிச்சலுக்கு கிடைத்த பரிசு அவருடைய சேனல் அந்நாட்டில் தடைசெய்யப்பட்டதுதான்.
 
சவூதிதான் ஜமாலின் கொலைக்குக்காரணமாக இருக்கலாம் என செய்திகள் வெளிவந்த வந்த வண்ணம் இருக்கின்றன. இது எவ்வளவு உண்மை என்பதை உலக நாடுகள் கொடுக்கின்ற அழுத்தத்திலும், பத்திரிக்கை சுதந்திரத்தின் வீரியத்தையும் பொறுத்து இவ்வழக்கு நீர்த்துப்போகுமா..? இல்லை நீதி புனரமைக்கப்படுமா என்பது  தெரியவரும்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments