Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கால்களை சேர்த்து வைத்திருந்தால் பலாத்காரத்தில் இருந்து தப்பித்திருக்கலாம்: ஏடாகூடமாக பேசிய நீதிபதி சஸ்பெண்ட்

கால்களை சேர்த்து வைத்திருந்தால் பலாத்காரத்தில் இருந்து தப்பித்திருக்கலாம்: ஏடாகூடமாக பேசிய நீதிபதி சஸ்பெண்ட்

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2016 (13:34 IST)
கனடா நாட்டில் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணிடம் ஏடாகூடமாக கேள்வி கேட்டு, பாதிக்கப்பட்ட பெண்ணை குற்றவாளி என கூறி, குற்றம் சுமத்தப்பட்டவரை விடுதலை செய்த நீதிபதி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.


 
 
கனடா நாட்டில், கல்கேரி நகரில் ராபின் கோம்ப் என்பவர் நீதிபதியாக உள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு இவரிடம் ஒரு பலாத்கார வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது.
 
இந்த வழக்கின் விசாரணையின் போது பாதிக்கப்பட்ட 19 வயது பெண்ணிடம், அந்த நபர் பலாத்காரம் செய்ய முயன்றபோது அதிலிருந்து தப்பிக்க ஏன் முயற்சி செய்யவில்லை. உங்கள் கால்கள் இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைத்திருந்தால் அந்த நபர் உங்களை பலாத்காரம் செய்ய முடிந்திருக்காதே.
 
மேலும் அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட இளம்பெண் தான் குற்றவாளி என கூறி பலாத்காரம் செய்தவரை விடுதலை செய்தார் ராபின் கோம்ப். நீதிபதியின் இந்த கேள்விக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
பொதுமக்கள் பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் அவர் வழங்கிய தீர்ப்பு மீண்டும் விசாரணைக்கு சென்றுள்ளது. மேலும் நீதிபதி ராபின் கோம்ப் சஸ்பெண்ட் செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விசாரணையின் போது ராபின் கோம்பின் பதவி பறிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 குழந்தைகளுக்கு மேல் இருந்தா பிரச்சினை இல்ல.. தேர்தலில் போட்டியிடலாம்! - சட்டத்தை மாற்றிய சந்திரபாபு நாயுடு!

உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறதா? உடனே இதை செய்யுங்கள்.. ஏஆர் ரஹ்மானின் பதிவு..!

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments