கடந்த 1865ஆம் ஆண்டு முன்னாள் அமெரிக்க அதிபர் ஆப்ரகாம் லிங்கன் அவர்களை நடிகர் ஜான் வில்க்ஸ் பூத் என்பவர் கொலை செய்தார். அமெரிக்க வரலாற்றில் ஒரு நடிகர் அதிபரை கொலை செய்தது அதுதான் முதல்முறை. இந்நிலையில் மீண்டும் ஒரு முறை நடிகர் ஒருவர் அதிபரை கொலை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்'. படத்தின் நாயகன் ஜானி டெப் விழா ஒன்றில் பகிரங்கமாக கூறியுள்ளார்
அமெரிக்காவில் நடைபெற்ற கிளாஸ்டன்பரி என்ற விழாவில் கலந்து கொண்ட ஜானி டெப், 'மீண்டும் ஒருமுறை அதிபரை ஒரு நடிகர் கொலை செய்யும் நேரம் வந்துவிட்டது என்று பேசியபோது அந்த விழாவில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடையாமல் கைதட்டி உற்சாகமாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே ஹாலிவுட் நடிகர்களுக்கு அவரை பிடிக்கவில்லை என்பதும் சமீபத்தில் நடந்த ஆஸ்கார் விருது வழங்கு விழாவில் கூட டிரம்ப் நடிகர்களால் கிண்டலடிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.