அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவார்- ஜில் பைடன்

Webdunia
திங்கள், 27 பிப்ரவரி 2023 (23:25 IST)
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் போட்டியிடுவதாக அவரது மனைவி ஜில் பைடன்  தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நாட்டில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பை எதிர்த்து ஜோ பைடன் போட்டியிட்டார்.

இதில், ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பதவி வகிக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் அடுத்தாண்டு (2024) அதிபர் தேர்தல் வரவுள்ளது. இத்தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்  மீண்டும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அதேபோல், தற்போதைய அதிபர் ஜோ பைடனும் இத்தேர்தலில் இரண்டாவது முறையாக அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக  அறிவித்திருந்தார்.

இந்த  நிலையில், தற்போது ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன், இன்று தலை நகர் நைரோபியில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், அடுத்தாண்டு நவம்பரில் நடக்கும் தேர்தலில், ஜொ பைடன் மீண்டும் போட்டியிடத் தயார் என்று கூறியுள்ளார்.

அதேபோல்  அதிபர் தேர்தலில்,விவேக் ராமசாமி, நிக்கி ஹாலே என்ற இந்திய வம்சாவளியினர் போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்திற்கு பிறகு முதல் பொதுக்கூட்டம்! புதுவை கிளம்பியது விஜய்யின் பிரச்சார வேன்..!

வேண்டுமென்றே விமானங்களை ரத்து செய்யப்பட்டதா? இண்டிகோ பைலட்டுக்கள் குற்றச்சாட்டு..!

'வந்தே மாதரம் விவாதம் மக்களை திசைதிருப்பவே': பாஜகவை சாடிய பிரியங்கா காந்தி

விமானத்தை பிடிக்க ஓடிய பரபரப்பில் மாரடைப்பு: லக்னோ விமான நிலையத்தில் சோகம்!

27 ஏக்கரில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் நினைப்பது நடக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments