உச்ச நீதிமன்ற நீதிபதி சோனியா சோடோ மேயர் இன்று அமெரிகாவில் புதிய அதிபர் ஜோ பிடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸுக்குப் பதவி பிரமாணம் செய்து செய்து வைத்தார்.
மேலும், பென்சில்வேனியாவில் பிறந்த ஜோ பிடன் அமெரிக்காவின் 46 வது அதிபராக தனது 78 வயதில் பைபிள் மீது கை வைத்துப் பதவியேற்றுக்கொண்டார். பல அழுத்தங்களை கடந்து அமைதியான முறையில் ஆட்சி நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய அதிபர் டிரம்ப் இந்தப் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை. அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபடவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் 7 அடுக்கு பாதுகாப்பு வாஷிங்டன் டிசியில் உள்ள வெள்ளைமாளிகையி பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பதவியேற்பு விழாவில் முன்னாள் அதிபர்கள் ஒபாமா, கிளிண்டன், ஜார்ஜ் புஷ் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர்.
இவ்விழாவுக்கு ரூ.320 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க தேசிய கீதத்தை லேடி காகா பாடினார், பின்னர் ஜெனிபர் லோஸ் சிறப்புப்பாடல் பாடினார்.
இந்நிலையில், அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராகப் பதவியேற்றுக்கொண்ட கமலா ஹாரிஸ், அமெரிக்காவுக்கு சிறப்பாக பணியாற்றுவதாகவும், அமெரிக்காவின் பாதுகாப்பை உறுதி செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், ஒபமா 2009 ல் பதவியேற்றபோது 20 லட்சம் பேர் பங்கேற்றனர், ஆனால் தற்போது கொரொனா காலக்கட்டம் என்பதால் தற்போது 1000 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.