Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒற்றுமையாக செயல்படுவோம், முன்னேறுவோம்: அமெரிக்க அதிபர் ஜோபைடனின் முதல் பேச்சு!

Webdunia
வியாழன், 21 ஜனவரி 2021 (07:39 IST)
ஒற்றுமையாக செயல்படுவோம், முன்னேறுவோம்
அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு அமெரிக்க நாட்டை முன்னேற்றுவோம் என்றும் நாமும் முன்னேறுவோம் என்றும் அதிபராக பதவியேற்ற ஜோபைடன் அவர்களின் முதல் பேச்சு மக்களுக்கு நம்பிக்கை தருவதாக இருந்து உள்ளது 
 
அமெரிக்கா தற்போது வேலைவாய்ப்பு, கொரோனா வைரஸ், இனவாதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் நிலையில் நேற்று அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்றார் ஜோபைடன்.
 
அதிபராக பதவியேற்ற பின் அவர் நாட்டு மக்களிடையே பேசியபோது ’வேலைவாய்ப்பு குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் அனைத்தையும் புதிதாக தொடங்குவோம். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம், அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால் கண்டிப்பாக அமெரிக்காவை முன்னேற்ற முடியும் என்று கூறினார் 
 
கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வைரஸால் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கையை வெகுவாக குறைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேலும் உள்நாட்டு பயங்கரவாதம் மற்றும் வெள்ளை இன வாதம் ஆகியவற்றை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்றும் நாட்டை முன்னேற்றுவதில் நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும் ஒற்றுமை இல்லாமல் எந்த அமைதியும் நிலைக்காது என்றும் கூறினார் 
 
வருங்காலத்தில் அமெரிக்கா சிறப்பான நாடாக திகழும் என்றும் நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் மற்றும் இணக்கமாக இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார் 
 
அமெரிக்க அதிபராக பதவியேற்ற ஜோ பைடன் இந்த நம்பிக்கையானது நாட்டு மக்களுக்கு புது தெம்பை வரவழைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீண்ட இடைவெளிக்கு பின் இன்று மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை.. என்ன நிலவரம்.!

கள்ளக்குறிச்சியில் திடீர் நில அதிர்வு.. பொதுமக்கள் அச்சம்!

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments