அமெரிக்காவுக்கு புதிய நாள் பிறந்துள்ளது
அமெரிக்காவுக்கு புதிய நாள் பிறந்துள்ளது என அதிபர் தேர்தல் வெற்றிக்கு பின் ஜோபைடன் அமெரிக்க மக்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் மக்கள் தெளிவாக பேசிவிட்டனர் என்றும் தெளிவான வெற்றியைத் தந்துள்ளனர் என்றும், அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டிய நேரம் இது என்றும் அவர் கூறியுள்ளர்.
மேலும் மக்களை பிரித்தாளும் அதிபராக இருக்க மாட்டேன் என்றும், அனைவரையும் அரவணைத்து செல்வேன் என்றும், அமெரிக்காவின் முதுகெலும்பாக இருக்கும் நடுத்தர மக்களுக்கு பாலமாக இருப்பேன் என்றும், துணை அதிபராக தேர்வாகி உள்ள கமலா ஹாரிஸ் சிறப்பாக செயல்படுவார் என்றும் ஜோபைடன் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தொற்று காலத்தில் பெருந்திரளாக வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும், எனது குடும்பத்தின் அன்பு, ஆதரவு இல்லாமல் இந்த நிலைக்கு வந்திருக்கமுடியாது என்றும் அவர் உருக்கமாக் தெரிவித்தார்.
மேலும் நீலம் சிவப்பு என பிரித்துப் பார்க்க மாட்டோம் என்றும், முழு அமெரிக்காவுக்கும் சேவை செய்வோம் என்றும் அதிபர் தேர்தல் மூலம் அமெரிக்காவில் எதையும் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளோம் என்றும், ஒபாமா வழியில் அமெரிக்கா நலனுக்காக செயல்படுவேன் துணை அதிபராக தேர்வாகியுள்ள கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் வெற்றிக்காக உழைத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றி என கூறிய கமலா ஹாரிஸ், மக்கள் ஜனநாயகத்தை காப்பாற்றி இருக்கின்றனர் என்றும் பெருமையாக தெரிவித்தார். மேலும் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த என் தாய் இந்த நிலையை எட்டுவோம் என நினைத்திருக்கமாட்டார்கள் என்றும், கருப்பின பெண்கள் உட்பட அனைத்து பெண்களுக்கும் சம உரிமை நிலைநாட்டப்படும் என்றும் தெரிவித்தார்.