Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாம் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்! உள்ளூர் முதல் உலகம் வரை!

Advertiesment
நாம் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி இலவசம்! உள்ளூர் முதல் உலகம் வரை!
, சனி, 24 அக்டோபர் 2020 (10:19 IST)
அமெரிக்க அதிபர் தேர்தல் அமெரிக்காவில் நடந்து வரும் நிலையில் ஜோ பிடன் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசியை இலவசமாக தருவதாக கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்காக அமெரிக்காவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் தான் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதாக அறிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி தற்போது அரசியலாகிவிட்டதாக தெரிகிறது. இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்குவது என்பது தேர்தல் பிரச்சாரமாக முன்வைக்கப்படும் நிலையில் அமெரிக்காவையும் இது விட்டுவைக்கவில்லை.

தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய ஜோ பிடன் “ட்ரம்ப் அரசு அமெரிக்காவை கொரோனாவிலிருந்து காக்க தவறிவிட்டது. உலக அளவில் அமெரிக்கா கொரோனாவால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஜனநாயக கட்சி ஆட்சிக்கு வந்தால் அமெரிக்கா முழுவதற்கும் இலவச கொரோனா தடுப்பூசி வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

78 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!