Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உருகாத ஐஸ்க்ரீம்: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

உருகாத ஐஸ்க்ரீம்: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
, புதன், 9 ஆகஸ்ட் 2017 (07:59 IST)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் ஐஸ்க்ரீம் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பத்தக்க ஒன்று. ஆனால் இந்த ஐஸ்க்ரீமை வாங்கியவுடன் அது உருகும் முன் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் வேஸ்ட் ஆகிவிடும். இந்த நிலையில் இனிமேல் இந்த கவலை இல்லை. ஐஸ்க்ரீம் உருகாத வகையில் ஜப்பான் விஞ்ஞானிகள் ஒரு கண்டுபிடிப்பை செய்துள்ளனர்.



 
 
ஸ்ட்ராபெரி என்ற பழத்தில் இருந்து எடுக்கப்படும் பாலிஃபினல் ( polyphenol ) என்ற திரவம், ஐஸ்க்ரீமில் கலந்தால் ஐஸ்க்ரீம் உருகாது என்பதை ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். சோதனையின் போது இந்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
 
பாலிஃபினல் கலந்த ஐஸ்க்ரீமை ஹேர் ட்ரையர், சூடான காற்று ஆகியவற்றில் சுமார் 5 நிமிடம் வைத்தும் ஐஸ்க்ரீமின் உருகாமலும் அதன் வடிவம் மாறாமலும் இருந்துள்ளதாம். வெண்ணிலா, சாக்லெட், ஸ்ட்ராபெரி என்று மூன்று சுவைகளில் இந்த உருகாத ஐஸ்க்ரீம்களை கண்டுபிடித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி ‘சீட்பெல்ட்‘ தலைவர். விமர்சனம் செய்த நடிகை ரம்யாவுக்கு பதிலடி கொடுத்த நடிகரின் மனைவி