ஜப்பானில் 6.1 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பசிபில் எரிமலை வளையம் அருகே அமைந்த நாடான ஜப்பான் தீவுகளில் அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஆண்டில் சராசரியாக உலகம் முழுவதும் ஏற்படும் நிலநடுக்கங்களில் 80%க்கும் அதிகமாக ஜப்பானில் ஏற்படுகிறது.
இந்நிலையில் தற்போது ஜப்பானின் வடமேற்கு கடலோர பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவான இந்நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. மேலும் இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் தகவல்கள் வெளியாகவில்லை.