கொரோனா வைரஸ் பீதி: 7 ஆயிரம் பேரை கப்பலில் சிறை வைத்த இத்தாலி!

Webdunia
சனி, 1 பிப்ரவரி 2020 (09:06 IST)
இத்தாலி வந்த கப்பலில் உள்ள பெண்ணுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறப்படுவதால் 7 ஆயிரம் பயணிகளையும் கப்பலை விட்டு வெளியே விடாமல் சிறை வைத்துள்ளது இத்தாலி.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் உலக நாடுகள் பலவற்றிலும் இந்த வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் பல நாடுகள் தங்கள் நாட்டில் வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்நிலையில் இத்தாலி தலைநகர் ரோம் அருகே உள்ள துறைமுகத்துக்கு 7 ஆயிரம் பயணிகளை கொண்ட பிரம்மாண்டமான கோஸ்டா ஸ்மரால்டா கப்பல் வந்துள்ளது. அதில் பயணித்த 54 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல் மற்றும் சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு இருக்கலாம் என கருதிய கப்பலில் உள்ள மருத்துவக்குழு அந்த பெண்ணையும், அவர் கணவரையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இந்த செய்தியை அறிந்த இத்தாலி கப்பலை துறைமுகத்திற்குள் அனுமதிக்காமல் கடலிலேயே தடுத்து நிறுத்தியுள்ளது. ஒருவேளை அந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருக்குமானால் அது மற்ற பயணிகளுக்கும் பரவியிருக்கலாம் என இத்தாலி அரசு அச்சம் கொண்டுள்ளது. கப்பல் கடல் பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால் 7 ஆயிரம் பயணிகள் கப்பலை விட்டு எங்கும் செல்ல முடியாமல் சிறை வைக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்த மாதிரிகள் இத்தாலியில் உள்ள ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது உறுதியானால் மட்டுமே கப்பல் இத்தாலிக்குள் அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் வேறு வேறு அல்ல, இரண்டும் ஒன்றுதான்.. தவெகவில் இணைந்த செங்கோட்டையன் பேட்டி..!

தமிழத்தை நோக்கி நகரும் டிக்வா புயல்.. சென்னைக்கு கனமழை ஆபத்தா?

சிறைச்சாலையா? மதுவிருந்து கூடாரமா? சிறைக்குள் நடந்த மதுவிருந்து வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!

முஸ்லீம் எம்பி இருந்தால் தானே அவர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க முடியும்: பாஜக எம்பி சர்ச்சை கருத்து..!

ஆதார் இருந்தால் ஒருவரை வாக்காளராக சேர்க்க வேண்டுமா? சுப்ரீம் கோர்ட் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments