Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரும் இஸ்ரேல் போர்.. ஐடி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்படுமா?

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (16:09 IST)
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உலகம் முழுவதும் உள்ள ஐடி நிறுவனங்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் என ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக பல ஐடி நிறுவனங்கள் பெரும் இன்னல்களை சந்தித்த நிலையில் தற்போது இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் இன்னும் நிலையை மோசமாக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐடி நிறுவனங்களுக்கு ஏற்கனவே கடன்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த போர் மேலும் சில பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்றும் கூறிய அவர் இஸ்ரேல் போர் தொடர்ந்தால் இஸ்ரேலில் உள்ள ஐடி நிறுவனங்கள் இந்தியா உள்பட ஒரு சில நாடுகளுக்கு மாறுவதற்கும் வாய்ப்பு உண்டு என்று அவர் தெரிவித்தார்.

இஸ்ரேல் நாட்டில் பல முன்னணி ஐடி நிறுவனங்களின் கிளைகள் இருக்கும் நிலையில் தற்போது அந்த ஐடி நிறுவனங்கள் செயல்படாமல் இருப்பதால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இந்த நிலை  தொடர்ந்தால் ஐடி நிறுவனங்கள் மாற்றப்பட வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இறந்து போன தாய்.. வங்கிக் கணக்கில் கோடிக்கணக்கில் பணம்! ஒரே நாளில் உலக பணக்காரன் ஆன நொய்டா இளைஞர்!

திருப்பதியில் AI தொழில்நுட்பம்.. பக்தர்களின் தரிசன நேரம் குறையுமா? முன்னாள் அதிகாரிகள் சந்தேகம்!

உண்மையான இந்தியர் யார் என்பதை சுப்ரீம் கோர்ட் முடிவு செய்ய வேண்டாம்: பிரியங்கா காந்தி காட்டம்..!

தமிழக மாணவனை கட்டாயப்படுத்தி போருக்கு அனுப்பிய ரஷ்யா? - நடவடிக்கை எடுக்குமா இந்திய அரசு?

நான் இருக்கும் வரை வட இந்தியர்களை ஓட்டுப்போட விட மாட்டேன்! - சீமான் உறுதி!

அடுத்த கட்டுரையில்
Show comments