Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 பாலஸ்தீன பத்திரிகையாளர்களை கொலை செய்த இஸ்ரேல் ராணுவம்.. அதிர்ச்சி தகவல்..!

5 பாலஸ்தீன பத்திரிகையாளர்களை கொலை செய்த இஸ்ரேல் ராணுவம்.. அதிர்ச்சி தகவல்..!

Mahendran

, திங்கள், 28 அக்டோபர் 2024 (17:05 IST)
காசாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. "பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இஸ்ரேலின் பாசிசத்தை அம்பலப்படுத்துவதில் எங்களது போராட்டம் ஒரு போதும் தளராது," என்று பாலஸ்தீன் ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
 இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்த சர்வதேச ஊடகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இஸ்ரேல் அரசு இந்த கொலைகளுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
இந்தத் தாக்குதலில்   அல்-கிஸா டிவியின் நிருபர் சயீது ரத்வான், சனத் செய்தி நிறுவன நிருபர் ஹம்ஸா அபு சல்மியா, அல்-குத்ஸ் அமைப்பின் நிருபர் ஹனீன் பரூத், சாத் அல்-சகீப் செய்தி நிறுவனத்தின் அப்துல் ரகுமான் அல்-தனானி, சுயாதீன நிருபர் நாதியா அல்-சயீத் ஆகியோர் கொல்லப்பட்டனர். 
 
பத்திரிகையாளர்களுக்கான பாதுகாப்பு கமிட்டியின் தகவலின்படி, கடந்த ஆண்டு மட்டும் காசா மற்றும் லெபனானில் 131 பத்திரிகையாளர்கள் இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. எந்த இணையதளம்?