Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்கா அறிவித்த போர் நிறுத்தத்திற்கு பிறகு ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள்: இஸ்ரேலில் 3 பேர் பலி

Siva
செவ்வாய், 24 ஜூன் 2025 (09:40 IST)
இஸ்ரேல்-ஈரான் மோதல் நிறுத்தப்பட்டதாக அமெரிக்கா அறிவித்த சில மணி நேரங்களில் ஈரான் ஏவுகணை இஸ்ரேல் மீது தாக்குதல்கள் நடத்தியதாகவும், இதனால் இஸ்ரேலில் 3 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
 
சுமார் இரண்டு வாரங்களாக நீடித்த ராணுவ மோதலுக்கு பிறகு, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே சண்டையை நிறுத்த ஒரு உடன்பாடு எட்டப்பட்டிருக்கலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்,  இரு நாடுகளும் முழுமையான போர் நிறுத்தத்தை பின்பற்றும் என்று அறிவித்திருந்தார். 
 
இருப்பினும், டிரம்ப் கூறியதை ஈரான் நிராகரித்தது. அத்தகைய உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்றும், இஸ்ரேல் முதலில் சண்டையை நிறுத்தினால் மட்டுமே தெஹ்ரான் அதை நிறுத்தும் என்றும் ஈரான் கூறியது. 
 
பின்னர், ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அராக்சி, இன்று அதிகாலை 4 மணி வரை இஸ்ரேல் மீது தாக்குதல் நடந்ததாக தெரிவித்தார். மேலும்  இஸ்ரேலில் ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இஸ்ரேல் நாடும் தெரிவித்துள்ளது. எனவே டிரம்பின் போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பு குழப்பத்தையும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தையும் மேலும் அதிகரித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வன்கொடுமை ஆகக்கூடாதுனா வெளிய வராதீங்க! - அகமதாபாத்தில் சர்ச்சை போஸ்டர்கள்!

மாடுகளுக்கு போராட தெரியவில்லை.. கூரிய கொம்புகள் இருப்பதை மறந்துவிட்டன: சீமான்

அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை.. குடையுடன் வெளியே போங்க..!

கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியது வருத்தம் அளிக்கிறது: டிடிவி தினகரன்

கலாச்சாரத்தை சீரழிக்கும் நைட் டான்ஸ் பார்கள்? துவம்சம் செய்த நவநிர்மான் சேனாவினர்!

அடுத்த கட்டுரையில்
Show comments