Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாலஸ்தீன் மக்களை கொன்று குவித்த இஸ்ரேல்..! கண்டித்து பதிவிட்ட த்ரிஷா, சமந்தா!

All eyes on rafah

Prasanth Karthick

, புதன், 29 மே 2024 (12:39 IST)
பாலஸ்தீன அகதி மக்கள் தங்கியிருந்த முகாம் மீது இஸ்ரேல் நடத்திய கொடூர தாக்குதலை கண்டித்து திரை பிரபலங்கள் பதிவிட தொடங்கியுள்ளனர்.

All eyes on rafah


இஸ்ரேல் – பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் இடையே கடந்த ஆண்டில் போர் ஏற்பட்ட நிலையில் ஒரு வருடமாகியும் பாலஸ்தீனில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. பாலஸ்தீன மக்கள் அதிகம் வசித்து வந்த காசாவை இஸ்ரேல் தொடர்ந்து தாக்கி நிர்மூலமாக்கியது. இதில் சுமார் 30 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அங்கிருந்து தப்பித்த பல மக்கள் ரபா நகரில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் உலக நாடுகள் எச்சரிக்கையை மீறியும் ரபா நகரை இஸ்ரேல் தாக்கி வருகிறது. முன்னதாக பல்வேறு இடங்களில் தாக்குதலை நடத்திய இஸ்ரேல் தற்போது பாலஸ்தீன மக்கள் அகதிகளாக தஞ்சம் அடைந்திருந்த அகதிகள் முகாமை தாக்கி 36 பேரை கொன்றது. இதில் பச்சிளம் குழந்தைகளும், பெண்களும் அடக்கம். உயிரிழந்த பச்சிளம் குழந்தையை தந்தை ஒருவர் கையில் வைத்துக் கொண்டு கதறும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் இஸ்ரேலின் இந்த செயலை கண்டித்து உலக அளவில் பல பிரபலங்களும் குரல் கொடுத்து வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் All eyes of rafah என்ற ஹேஷ்டேகும் ட்ரெண்டாகி வருகிறது. நடிகை த்ரிஷா, சமந்தா உள்ளிட்ட இந்திய திரை பிரபலங்களும் பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்து கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அண்ணாமலை ஒரு லூசு.. கலக்கபோவது யாரு நிகழ்ச்சிக்கு பொருத்தமானவன்: காயத்ரி ரகுராம்..!