ஒமிக்ரான் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில் இஸ்ரேலில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கடந்த 2019 இறுதி முதலாக கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்ட நிலையில் பல்வேறு வேரியண்டுகள் அடுத்தடுத்து பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
ஒமிக்ரான் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில் இஸ்ரேலில் புதிய வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. ஆம், இஸ்ரேலில் கொரோனா வைரஸின் ஓமைக்ரான் திரிபின் பிஏ1 மற்றும் பிஏ2 ஆகிய இரு திரிபுகள் ஒன்றிணைந்து புதிய வைரஸாக உருமாறியுள்ளதாக அந்நாட்டு சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், எதிர்பார்த்த அளவுக்கு இந்த வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. காய்ச்சல், தலைவலி மற்றும் தசைநார் சிதைவு போன்ற லேசான அறிகுறிகளையே வெளிப்படுத்துவதாக இஸ்ரேல் சுகாதாரதுறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.