Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போரை நிறுத்த சம்மதம் தெரிவித்த இஸ்ரேல்.. மறுத்த ஹமாஸ்? ஏமாற்றத்துடன் திரும்பிய அமெரிக்கா!

Prasanth Karthick
புதன், 21 ஆகஸ்ட் 2024 (08:34 IST)

இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளார் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்.

 

 

இஸ்ரேல் - பாலஸ்தீன ஆதரவு ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓராண்டு காலமாக போர் நடந்து வருகிறது. இதனால் காசாவில் புகுந்த இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 38 ஆயிரம் பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த போரை நிறுத்துவதில் அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

 

இதற்காக சில நாட்களுக்கு முன்னதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் சென்றார். இஸ்ரேல் சென்ற அவர் அங்கு அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் இஸ்ரேல் போர் நிறுத்தத்திற்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புக் கொண்டுள்ளது.

 

ஆனால் இந்த அமைதி ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் மறுத்துள்ளது. ஒப்பந்தத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான முடிவுகளை அமெரிக்கா எடுத்துள்ளதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு அமெரிக்க தரப்பில் பதில் ஏதும் அளிக்கவில்லை. ஆனால் அமைதி ஒப்பந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஆண்டணி பிளிங்கன் ஏமாற்றத்துடன் நாடு திரும்பியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments