Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இதுதான் இத்தாலியின் தற்போதைய நிலை – வாட்ஸ் ஆப்பில் பரவிய வதந்தி !

இதுதான் இத்தாலியின் தற்போதைய நிலை – வாட்ஸ் ஆப்பில் பரவிய வதந்தி !
, செவ்வாய், 24 மார்ச் 2020 (15:59 IST)
இத்தாலியில் அதிகளவில் கொரோனா உயிர்பலி ஏற்பட்டுள்ள நிலையில் அந்நாடு பற்றி அதிகளவில் வதந்திகள் பரவிக்கொண்டுள்ளன.

உலகெங்கும் பரவிவரும் கொரோனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள நாடாக இத்தாலி உள்ளது. இத்தாலியில் ஒவ்வொரு நாளும் நூற்றுக் கணக்கானோர் கொரோனா வைரசால் பலியாகி வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 602 பேர் இத்தாலியில் மட்டும் கொரோனா பலியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை அடுத்து இத்தாலியில் மட்டும் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை தாண்டியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் வாட்ஸ் ஆப்பில் பரவிய வீடியோ ஒன்றில்  விமான நிலையத்துக்கு அருகில் நிற்கும் மக்கள் சிலர் மூச்சுவிட முடியாமக் கஷ்டப்படுவது, அலறிக்கொண்டு அங்கேயும் இங்கேயும் ஓடுவது என அச்சமூட்டும் நிலையில் உள்ளனர். இத்தாலியில் தற்போது மக்களின் நிலை இதுதான் எனக் கூறி வாட்ஸ் ஆப்பில் உலாவர ஆரம்பித்தது.

ஆனால் இந்த வீடியோ உண்மை இல்லை எனத் தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட இந்த வீடியோவானது கடந்த 2019 ஆம் ஆண்டு மேற்கு ஆப்பிரிக்காவின் செனகல் நாட்டின் விமான நிலையத்தில் அவசரநிலை பயிற்சிக்காக எடுக்கப்பட்டது என்பது தெரியவந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனா தினமும் எப்படி பரவுகிறது ? தயாநிதி மாறன் எம்.பி வெளியிட்ட வைரல் வீடியோ…!