கொரானாவுக்கு மருந்து?: அடுத்த நாளே குணமான அதிசயம்

Webdunia
திங்கள், 3 பிப்ரவரி 2020 (09:03 IST)
சீனாவில் ஆரம்பித்த கொரானா வைரஸ் உலகம் முழுவதும் தற்போது பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே சீனாவில் 300க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகி உள்ள நிலையில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் 
 
சீனா மற்றும் என்று சீனாவின் அண்டை நாடுகளிலும், இந்தியா உள்பட வெளிநாடுகளிலும் இந்த வைரஸ் பரவி வருவதால் உலகம் முழுவதும் இந்த வைரஸ் குறித்து பெரும் அச்சத்துடன் உள்ளது. இந்த நிலையில் தாய்லாந்து நாட்டில் வைரஸால் தாக்கப்பட்டவர்கள் மொத்தம் 35 பேர் இருப்பதாகவும் அவர்களில் ஒரு சிலர் மட்டும் குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் செய்தி வெளியாகியுள்ளடூ.
 
இதனை அடுத்து தாய்லாந்து நாட்டில் உள்ள மருத்துவர் ஒருவர் கொரானா வைரசுக்கு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. லோபினாவிர், ரிட்டோனாவிர் என்ற இந்த இரண்டு மருந்து கலவையை அவர் கொரானா வைரஸ் தாக்கிய நோயாளிக்கு கொடுத்ததாகவும் அவர்கள் மறுநாளே குணமாகி வீடு திரும்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது 
 
அதே நேரத்தில் இதே கலவையை இன்னொரு பெண்ணுக்கு கொடுத்த போது அந்த பெண்ணுக்கு அலர்ஜி ஏற்பட்டுவிட்டதாகவும் கலவையின் விகிதம் மாறிவிட்டதால் இவ்வாறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இந்த மருந்து உண்மையிலேயே கொரானா வைரஸைக் கட்டுப்படுத்தும் மருந்தா? என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். கொரானா மட்டும் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு விட்டால் உலக நாடுகள் நிம்மதி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நவம்பர் 27-ல் வங்கக் கடலில் மேலும் ஒரு தாழ்வு மண்டலம்! இந்திய வானிலை ஆய்வு மையம்

சீமான்தான் நம்பர் ஒன்!.. டிஜிட்டல் சர்வே மூலம் கிடைத்த ரிசல்ட்!..

வாக்காளர் பட்டியல் SIR படிவத்தை நிரப்ப ஏஐ தொழில்நுட்பம்: புதிய முயற்சி!

40 ஆண்டு அரசியல்.. 10 முறை முதல்வர்.. நிதிஷ்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1.64 கோடி, 13 பசுக்கள் தானா?

உலகிலேயே கஷ்டமில்லாத பணி கவர்னர் பணி.. கனிமொழி எம்பி கிண்டல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments