Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா வைரஸ் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கமல்ஹாசன்: ஆச்சரிய தகவல்

Advertiesment
கொரோனா வைரஸ் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே கூறிய கமல்ஹாசன்: ஆச்சரிய தகவல்
, ஞாயிறு, 2 பிப்ரவரி 2020 (16:40 IST)
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தலைவிரித்து ஆடி வருகிறது என்பதும் அந்நாட்டிலுள்ள முக்கிய பகுதி ஒன்றில் சுமார் 200 பேர்களுக்கு மேல் இந்த வைரஸ் தாக்குதலால் பலியாகியுள்ளனர் என்பது மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்போது இந்த வைரஸால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது சீனாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் குறித்து சில திடுக்கிடும் தகவல்கள் வெளிவரத் தொடங்கியிருக்கின்றன. இந்த வைரசை சீனா தனது ஆய்வுக்கூடங்களில் உருவாக்கியதாகவும் பிற நாடுகளில் இந்த வைரஸை தாக்குவதற்கு பயன்படுத்துவதற்காக உருவாக்கியது என்றும், ஆனால் தற்போது தன் வினை தன்னை சுடும் என்ற முறையில் தன்னுடைய நாட்டில் உள்ள மக்களையே இந்த வைரஸ் கொன்று வருவதாகவும் சில ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர் 
 
இந்த வைரஸின் தன்மை குறித்து சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் ’தசாவதாரம்’ படத்தில் குப்பியை சாப்பிட்டவுடன் குரங்கு ஒன்று கரையுமே அதுதான் இந்த வைரஸின் உண்மையான தாக்கம் என்றும் ஆனால் சீனா அதை உலக நாடுகளுக்கு மறைத்து வருகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்
 
ஏற்கனவே எபோலா உள்பட ஒருசில வைரஸ்கள் பரவிய போது சீனா மீது தான் பல நாடுகள் சந்தேகம் தெரிவித்தன. ஆனால் அப்போதெல்லாம் சீனா மழுப்பி தப்பித்து விட்டதாகவும் ஆனால் இந்த கொரோனா வைரஸ் விஷயத்தில் சீனா தப்பிக்க முடியாது என்றும் உலக நாடுகளின் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்பார்த்தபடியே பாஜகவில் இணைந்தார் சசிகலா புஷ்பா!