Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர்களை கொல்ல தயாராகிறதா AI தொழில்நுட்பம்? – முன்னாள் கூகிள் CEO சொன்ன ஷாக் தகவல்!

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (10:01 IST)
உலகம் முழுவதும் AI எனப்படும் Artificial Intelligence ன் வளர்ச்சி அதிகமாக உள்ள நிலையில் இதனால் ஏற்படும் அபாயங்கள் குறித்து கூகிள் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்மிட் எச்சரித்துள்ளார்.



தற்போதைய தொழில்நுட்ப உலகில் AI டெக்னாலஜியின் தாக்கம் அதிகரித்துள்ளது. Open AI வெளியிட்ட ChatGPT மற்றும் கூகுள் வெளியிட்டுள்ள BARD என நாளுக்கு நாள் புதுப்புது AI தொழில்நுட்பங்கள் மக்களிடையே பிரதான முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.

கோப்புகள், ஆவணங்கள் எழுதுவது தொடங்கி, புகைப்படம் எடிட் செய்தல், வீடியோ உருவாக்குதல் என அசுர வேகத்தில் வளர்ந்து வரும் ஆர்டிபிசியல் இண்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மனித இனத்திற்கு ஆபத்தாக முடியலாம் என்கிறார் கூகிள் முன்னாள் சிஇஓ எரிக் ஷ்மிட்.

சமீபத்தில் தி வால் ஸ்ட்ரீட் ஜார்னல் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர், இந்த AI தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சிக்கு உதவுகிறதோ அதே அளவு ஆபத்தையும் உருவாக்குவதாகவும், AI தொழில்நுட்பம் குறித்த அறிவு பயங்கரவாத அமைப்புகளால் கைகொள்ளப்படும் பட்சத்தில் இது மனித இனத்திற்கு அழிவை ஏற்படுத்தும் ஒன்றாக மாறும் அபாயம் உள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிக்டாக் நேரலையில் பேசி கொண்டிருந்த அழகி சுட்டுக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

பாகிஸ்தான் கொடிக் கூட இங்க வரக் கூடாது! - அமேசான், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அரசு அதிரடி உத்தரவு!

கர்ப்பிணி மனைவி, மாமனார், மாமியாரை வெட்டி கொன்ற வாலிபர்.. ராணிப்பேட்டையில் அதிர்ச்சி சம்பவம்..!

இதுதான் தமிழன் கலாச்சாரம்! சென்னை சிறுவன் செயலால் வியந்த வெளிநாட்டு பயணி! - வைரலாகும் வீடியோ!

இனி போட்டோ மாத்தி ஏமாத்த முடியாது! சிப் பொருத்திய e-Passport அறிமுகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments