Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரான் போர்! இந்தியாவில் எகிறப்போகும் பெட்ரோல் விலை? - மத்திய அரசு முன்னெச்சரிக்கை!

Prasanth K
திங்கள், 16 ஜூன் 2025 (08:23 IST)

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் மூண்டுள்ள நிலையில் கச்சா எண்ணெய் விலை உயரும் வாய்ப்புகள் உள்ள நிலையில் இந்தியா அதற்கான முன்னெச்சரிக்கைகளில் ஈடுபட தொடங்கியுள்ளது.

 

இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்பட்டுள்ள நிலையில் இரு நாடுகளும் ஏவுகணைகளை ஏவி தாக்கிக் கொள்வது உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்த மோதல் உலகளாவிய கச்சா எண்ணெய் வணிகத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

 

மத்திய கிழக்கில் ஏற்படும் போரால் வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றுமதி குறைவதுடன், விலையும் அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தொடங்கி சமையல் கேஸ் வரை அனைத்தும் விலை உயரும் அபாயம் உள்ளது.

 

இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 12 சதவீதத்தை மட்டுமே உள்நாட்டில் உற்பத்தி செய்கிறது. மீத 88 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகின்றன. அதிகபட்சமாக ரஷ்யாவிடமிருந்து 38 சதவீதம் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, மீத தேவைக்கு வளைகுடா நாடுகளில் இருந்தே கச்சா எண்ணெய்யை பெறுகிறது. சுமார் 60 சதவீதத்திற்கும் மேலாக இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவை இந்த போரால் பாதிக்கும் அபாயம் உள்ளது.

 

ஆனால் அதை தவிர்க்க மத்திய அரசு தற்போதே திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை கூடுதலாக இறக்குமதி செய்ய பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

மதுரை மாநாட்டை தள்ளி வைத்த ஓபிஎஸ்.. பாதயாத்திரை செல்கிறார் ஓபிஎஸ் மகன்..!

1 ரூபாய்க்கு BSNL சிம் கார்டு: சுதந்திர தின சலுகை அறிவிப்பு

ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,120 விலை உயர்ந்த தங்கம்.. நகை பிரியர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments