ஈரான் நாட்டில் தற்போது கடந்த சில நாட்களாக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் போராட்டக்காரர்கள் அரசு தொலைக்காட்சியை ஹேக்கிங் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவது கட்டாயம் என்ற சூழலில் அதனை எதிர்த்து இளம்பெண்கள் உள்பட பலர் மிகப்பெரிய போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவிகளும் கலந்து கொண்டதை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது
இந்த நிலையில் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த ராணுவம் வரவழைக்கப்பட்ட நிலையில் துப்பாக்கி சூடு நடந்தது என்பதும் இதில் 2 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது
இந்த நிலையில் ஈரானின் அரசு தொலைக்காட்சியை போராட்டக்காரர்கள் ஹேக் செய்திருப்பதாகவும் அதில் எங்களுடன் இணைந்து போராட வாருங்கள் என்ற செய்தி வெளி வந்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஈரான் அரசு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.