ஈரான் தளபதி சுலைமானி அமெரிக்க ராணுவ தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை தொடங்கியுள்ளது ஈரான்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இது உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சுலைமானி கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானிலிருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றும் தீர்மானத்தை ஈரான் அரசு நிறைவேற்றியுள்ளது.
மேலும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ரத்து செய்த ஈரான், தற்போது ஈராக்கில் உள்ள அமெரிக்கா மற்றும் கூட்டணி படைகள் தளத்தின் மீது ராக்கெட்டுகளை ஏவி தாக்குதலை தொடர்ந்துள்ளது. இதனால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து முழுமையாக தெரிய வரவில்லை. ஆனால் அமெரிக்க தளம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால் ட்ரம்ப் இதை சாதாரணமாக விட்டுவிட மாட்டார் என பேசிக் கொள்ளப்படுகிறது.
ஈரான் – அமெரிக்கா இடையேயான இந்த சண்டை போர் மூளும் அபாயத்தை ஏற்படுத்து வருவதாக உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன.