Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், தண்டனை கொடுத்தே தீருவோம்: அயதுல்லா அலி கமேனி

Siva
திங்கள், 23 ஜூன் 2025 (09:13 IST)
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்களை ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கடுமையாக கண்டித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். நமது எதிரிகள் மிகப்பெரிய தவறு செய்துவிட்டார்கள், அதற்கான தண்டனையை எதிர்கொள்வார்கள் என்றும் அவர் சபதம் செய்தார்.
 
ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலுக்கு தனது முதல் X தளத்தில் அயதுல்லா அலி கமேனி கூறியபோது " நமது எதிரிகள் ஒரு பெரிய தவறு செய்துள்ளார்கள்,  ஒரு பெரிய குற்றத்தை செய்துள்ளார்கள்,  அது தண்டிக்கப்பட வேண்டும், தண்டிக்கப்படும்’ என்று கூறியுள்ளார்.
 
அதேபோல்  ஈரானின் அதிபர் மசூத் பெசெஸ்கியான், அமெரிக்காவுக்கு "பதிலடி கொடுப்போம் என்று கூறினார். பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுடன் தொலைபேசியில் பேசியபோது பெசெஸ்கியான், "அமெரிக்கர்கள் தங்கள் ஆக்கிரமிப்புக்கு பதிலடி பெறுவார்கள்’ என்று தெரிவித்தார்.
 
எனது நாட்டின் நலன்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
 
ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் இந்தத் தாக்குதல்களை கண்டித்து, "அமெரிக்காவால் ஈரானிய அணுசக்தி வசதிகள் குண்டுவீத் தாக்கப்பட்டிருப்பது ஒரு ஆபத்தான திருப்பத்தை குறிக்கிறது" என்று கூறினார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments