காசா மீது இஸ்ரேல் அதிரடியாக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இந்த தாக்குதலை தடுக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என ஈரான் அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல் ராணுவம் அதிரடியாக காசா மீது தாக்குதல் நடத்தி வருகிறது என்றும் குறிப்பாக மருத்துவமனைகள், குடியிருப்பு பகுதிகள் ஆகியவற்றின் மீது தாக்குதல் நடத்துவதால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஈரான் அதிபர் ரைசி அவர்கள் இது குறித்து கூறிய போது காசா மீதான தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து இந்தியா இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக தாக்குதலை நிறுத்த முயற்சிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியுடன் அவர் தொலைபேசியில் பேசிய பின்னர் இஸ்ரேல் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வர இந்தியா தனது அனைத்து முயற்சிகளையும் பயன்படுத்த வேண்டும் என்றும் இந்தியாவால் அது நிச்சயம் முடியும் என்றும் கூறியுள்ளார்.
ஈரானின் வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி காசா தாக்குதலை நிறுத்த முயற்சி செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.