Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கடவுளின் தூதர் அவமதிப்பு: மாணவனுக்கு மரண தண்டனை!

Sinoj
சனி, 9 மார்ச் 2024 (15:23 IST)
பாகிஸ்தான் நாட்டில் கடவுளின் தூதரை அவமதிக்கும் வகையிலான புகைப்படங்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்ததாக  மாணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
 
பாகிஸ்தான் நாட்டில் பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடக்கிறது. இஸ்லாமிய நாடான அங்கு இஸ்லாமிய மதக்கடவுள், மதக்கடவுள்களின் இறைத்தூதர் பற்றி அவதூறு கருத்துகள் கூறினாலோ, அவமதித்தாலோ, மத நிந்தனை செய்தாலோ அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் அமலில் உள்ளது.
 
 
இந்த  நிலையில்,  பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவர் ஒருவர் இஸ்லாமிய மதக் கடவுளின் இறைத்தூதர் பற்றி அவதூறு கருத்துகள் இடம்பெற்ற புகைப்படங்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்ததுள்ளார்.
 
கடந்த 2022 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடந்து வந்தது.
 
இந்த நிலையில்   இறைத்தூதர் பற்றிய அவதூறு கருக்கள் இடம்பெற்ற புகைப்படங்கள்,வீடியோக்களை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்த வழக்கில் 22 வயது மாணவன் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, 22 வயது மாணவனுக்கு மரணதண்டனையும், 17 வயது மாணவனுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆழ்ந்த அனுதாபங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்..

போய் வாருங்கள் அப்பா!.. ஈவிகேஎஸ் மறைவு குறித்து ஜோதிமணி எம்பியின் உருக்கமான பதிவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிடுமா? அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

பாஜக மூத்த தலைவர் அத்வானி திடீர் உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

உருவானது புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி.. ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments