Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிரம்பின் முடிவால் பாதிப்புக்கு உள்ளாகப்போகும் இந்தியர்கள்

Webdunia
திங்கள், 18 டிசம்பர் 2017 (11:37 IST)
அமெரிக்காவில் வெளிநாடுகளை சேர்ந்த கணவன், மனைவி வேலை செய்யும் சலுகை ரத்தாகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் இந்த முடிவால் இந்தியர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட பிற உலக நாடுகளை அமெரிக்காவில் தங்கியிருந்து வேலை செய்பவர்களுக்கு ‘எச்-1 பி’ விசா கட்டாயமாகும். இந்த விசாக்களில் 70 சதவீதம் இந்தியர்களுக்கே வழங்கப்படுகிறது. ஒபாமா அதிபராக இருந்த காலத்தில்,‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் பணியாற்றுபவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு எச்-4 விசா மூலம் வேலை பார்க்கும் வாய்ப்பினை வழங்கினார்.
 
தற்போதைய ஜனாதிபதி டிரம்ப், அமெரிக்க நிறுவனங்களில் அமெரிக்கர்களுக்குத்தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதனால் ‘எச்-1 பி’ விசா மூலம் அமெரிக்காவில் வேலை செய்பவர்களின் வாழ்க்கைத்துணைவர்களுக்கு (எச்-4 விசாதாரர்களுக்கு) அங்கு வேலை பார்ப்பதற்கான அனுமதி ரத்தாகும் நிலை உருவாகியுள்ளது.

டிரம்பின் இந்த முடிவு நடைமுறைக்கு வரும்பட்சத்தில், அது பல்லாயிரக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments