Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே ஆண்டில் மூன்று மடங்கு.. இந்தியர்களின் ஸ்விஸ் வங்கி சேமிப்பு அதிகரிப்பு!

Prasanth K
வெள்ளி, 20 ஜூன் 2025 (09:59 IST)

இந்தியாவிலிருந்து பலர் தங்கள் பணத்தை ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைக்கும் நிலையில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் இது மூன்று மடங்காக அதிகரித்துள்ளதாக ஸ்விஸ் வங்கி தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் பல தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் தங்கள் கருப்பு பணத்தை ஸ்விஸ் வங்கியில் சேர்த்து வைப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். ஸ்விட்சர்லாந்தில் வங்கியில் பணம் வைப்பு செய்வது சட்டப்பூர்வமானதாக உள்ள நிலையில் இதில் பெரிய நடவடிக்கைகள் எடுக்க முடியாத நிலையில், இந்தியாவின் கருப்பு பணம் ஏராளமாக ஸ்விஸ் வங்கியில் சேமிக்கப்பட்டு வருகிறது.

 

ஸ்விஸ் வங்கி வெளியிட்டுள்ள தகவலின்படி, சுமார் 3.5 பில்லியன் ஸ்விஸ் ப்ராங்க் (இந்திய மதிப்பில் ரூ.37,600 கோடி) இந்தியர்களின் பணம் ஸ்விஸ் கணக்குகளில் உள்ளது. இது முந்தைய ஆண்டில் இருந்த 1.04 பில்லியன் ஸ்விஸ் ப்ராங்கை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

 

இதில் பெரும்பாலும் தனியார் நிறுவனங்கள், வங்கிகளின் பணம் என்று கூறப்பட்டுள்ளது. அதேசமயம் தனிநபர் டெபாசிட் கடந்த ஆண்டை விட 11 சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் ஸ்விஸ் வங்கி தெரிவித்துள்ளது. ஸ்விஸ் தகவலின்படி தனிநபர் கணக்குகளில் 346 மில்லியன் ஸ்விஸ் ப்ராங்க் (இந்திய மதிப்பில் ரூ.3,675 கோடி) உள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவில் காபி விலை கிடுகிடு உயர்வு.. டிரம்ப் வரிவிதிப்பு தான் காரணமா?

பாகிஸ்தானோடு கொஞ்சி குலாவும் அமெரிக்கா! BLA பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு!

கை ஒரு இடத்தில்.. கால் ஒரு இடத்தில்.. மாமியாரை துண்டு துண்டாக வெட்டிய மருமகன்..!

இந்தியா - வங்கதேசம் இடையே முக்கிய பொருட்கள் இறக்குமதிக்குத் தடை.. அதிரடி உத்தரவு.

ராகுல் காந்தியின் செய்தி தொடர்பாளராக மாறிய முதல்வர் ஸ்டாலின்: குஷ்பு கடும் விமர்சனம்

அடுத்த கட்டுரையில்
Show comments