Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கனடா செல்ல ஆர்வம் காட்டாத இந்திய மாணவர்கள்! படிக்க செல்வோரின் எண்ணிக்கை சரிவு..!!

Senthil Velan
புதன், 17 ஜனவரி 2024 (14:53 IST)
இந்தியாவில் இருந்து கனடாவுக்கு படிக்கச் செல்லும் மாணவர்களில் கடந்த ஆண்டு 86% சரிவு ஏற்பட்டதாக அந்நாட்டின் குடியேற்றத்துறை அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.
 
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா - கனடா இடையேயான உறவில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இங்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிட்டது என தெரிவித்தார். 

கடந்த 2022-ன் கடைசி 3 மாதங்களில் கனடாவுக்குச் சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 8 ஆயிரத்து 940 ஆக இருந்த நிலையில், 2023-ன் கடைசி 3 மாதங்களில் இந்த எண்ணிக்கை 14 ஆயிரத்து 910 ஆக சரிந்ததாக கனடா வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், கனடா செல்லும் இந்திய மாணவர்களில் 86% சரிவு ஏற்பட்டுள்ளது.

ALSO READ: தென் தமிழக மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.! நீலகிரியில் உறைபனி எச்சரிக்கை.!!
 
மூன்று காரணங்களால் இந்திய மாணவர்கள் கனடாவுக்குப் பதிலாக வேறு நாடுகளை தேர்வு செய்யத் தொடங்கி உள்ளனர். ஒன்று, இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் கசப்பான உறவு. இரண்டாவது, இந்திய மாணவர்கள் தங்குவதற்கு இங்கு போதுமான அளவு வீடுகள் இல்லாதது. மூன்றாவது, இங்குள்ள பல கல்வி நிலையங்களில் போதுமான கல்வி வசதிகள் இல்லாதது என கனடா அமைச்சர் மார்க் மில்லர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு பகுதி: கனமழை எச்சரிக்கை..!

தமிழகத்தில் மார்ட்டின் மருமகன்.. புதுவையில் மார்ட்டின் மகன்.. பாஜகவில் இணைகிறாரா?

உத்தவ் தாக்கரே தோல்வி எதிர்பார்த்தது தான்.. அவர் ஒரு அரக்கன்: கங்கனா ரனாவத்

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்த புகார்களுக்கு தனி இணையத்தளம்: தவெக தலைவர் விஜய்

அடுத்த கட்டுரையில்
Show comments