பிரதமர் மோடி சென்ற நிலையில், அவரை ரஷ்ய பொதுமக்கள் கிருஷ்ண பஜனை பாடி வரவேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பிரிக்ஸ் மாநாடு நடைபெற இருக்கும் நிலையில், இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று ரஷ்யா சென்றுள்ளார். இரண்டு நாள் பயணமாக அவர் ரஷ்யா சென்றுள்ள நிலையில், 16வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்று, அதன்பின் அதிபர் புதினிடம் முக்கிய பயிற்சி வார்த்தை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும், பிரிக்ஸ் குறிப்பினார் நாடுகளான எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவின் காசான் நகரை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டதாகவும், அங்கு கூடியிருந்த இந்திய வம்சாவளியினர் மற்றும் ரஷ்யர்கள் கிருஷ்ண பஜனை பாடி அவரை வரவேற்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.