Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர்: நிர்மலா சீதாராமன்

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (13:10 IST)
பாகிஸ்தான் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர் என அமெரிக்காவில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார் 
 
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தற்போது அமெரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் அவர் சர்வதேச பொருளாதாரத்திற்கான பீட்டர்சன் மையத்தின் தலைவருடன் உரையாடினார். 
 
அப்போது உலகின் இரண்டாவது பெரிய முஸ்லிம் மக்கள் தொகை கொண்ட நாடு இந்தியா என்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் வாழ்வில் எந்தவித கஷ்டமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இஸ்லாமிய நாடு என்று பாகிஸ்தான் தன்னை அறிவித்துக் கொண்ட நிலையில் பாகிஸ்தானில் உள்ள முஸ்லிம்களை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் நன்றாக உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.
 
இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லிம் சமூகத்தினரும் தங்கள் தொழிலை நன்றாக செய்து வருகின்றனர் என்றும் தங்களது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை தருகின்றனர் என்றும் அரசாங்கம் அவர்களுக்கு தோழமையாக இருந்து வருகிறது என்றும் அவர் கூறினார்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

505 வாக்குறுதிகளில் 66 மட்டும்தான் நிறைவேற்றம்.. வெள்ளை அறிக்கை குடுங்க! - அன்புமணி ராமதாஸ்!

1 சவரன் 31 ஆயிரம்தான்..! அறிமுகமாகும் 9 கேரட் தங்கம்! - வாங்கலாமா? என்ன ரிஸ்க்?

போலீஸார் மீது தாக்குதல் நடத்திய வடக்கு தொழிலாளர்கள்! - காட்டுப்பள்ளியில் கைது நடவடிக்கை!

சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது! - அமெரிக்க வெள்ளை மாளிகை ஆவேசம்!

90 சதவீத பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி குறைப்பு? எந்தெந்த பொருட்கள்? - இன்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்!

அடுத்த கட்டுரையில்
Show comments