Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீர் விவகாரம் பற்றி பாகிஸ்தானோடு மட்டும்தான் பேசுவோம் – ட்ரம்ப் வாயை அடைத்த ஜெய்சங்கர்

Webdunia
வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (11:34 IST)
இந்தியா விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானோடு பேச தயார் என மூக்கை நுழைத்த அமெரிக்க அதிபருக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்.

சமீபத்தில் நடைபெற்ற ஜி20 மாநாட்டில் கலந்து கொண்ட ட்ரம்ப் “மோடி காஷ்மீர் விவகாரத்தில் உதவ வேண்டும்” என கோரிக்கை வைத்ததாக கூறிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய பிரதமர் அப்படி எந்த உதவியையும் கேட்கவில்லை. காஷ்மீர் பிரச்சினையை நாங்கள் பாகிஸ்தானோடு பேசி முடிவு செய்து கொள்வோம் என இந்தியா தரப்பில் சொல்லப்பட்டிருந்தது.

இந்நிலையில் “இந்தியா விரும்பினால் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானிடம் பேச நான் தயார்” என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். சும்மா சும்மா இந்திய-பாகிஸ்தான் விவகாரத்தில் ட்ரம்ப் இப்படி மூக்கை நுழைப்பதை இந்தியா விரும்பவில்லை. அதனால் ட்ரம்பின் அறிவிப்புக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் “காஷ்மீர் பிரச்சினையை நாங்கள் பாகிஸ்தானோடு மட்டும்தான் பேசுவோம். இதில் வேறு எந்த நாட்டின் மத்தியஸ்தமும் தேவையில்லை” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

கூட்டணியில் மட்டுமே பங்கு.. ஆட்சியில் எப்போதும் பங்கு கிடையாது: அமைச்சர் ஐ. பெரியசாமி

ராகுல் காந்தியை விட அதிக வாக்குகள் பெற்ற பிரியங்கா காந்தி. வயநாடு தொகுதி நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments