Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யாரும் கீவ் போகாதீங்க.. உக்ரைன் இந்தியர்களுக்கு எச்சரிக்கை! – இந்திய தூதரகம்!

Webdunia
வியாழன், 24 பிப்ரவரி 2022 (12:33 IST)
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில் உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் எல்லையில் ரஷ்யா தனது ராணுவத்தை குவித்து வந்த நிலையில் சில மணி நேரங்கள் முன்னதாக அதிகாரப்பூர்வமாக போரை அறிவித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். அதை தொடர்ந்து உக்ரைனின் நகரங்கள் மீது ரஷ்யா குண்டு மழை பொழிய தொடங்கியுள்ளது.

இதனால் உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் “போர் மூண்டுள்ள இந்த கடினமான சூழலில் உக்ரைன் வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் துணையாக நிற்கும். உக்ரைன் வாழ் இந்திய மக்கள் தங்கள் வீடுகள், குடியிருப்புகள், தங்கியுள்ள விடுதிகளை விட்டு வெளியேறாமல் பத்திரமாக அங்கேயே இருக்க வேண்டும். கீவ் நகரம் நோக்கி சென்று கொண்டிருக்கும் மக்கள் மற்றும் கீழ் நகரின் கிழக்கு நுழைவாயில்களில் பயணிப்போர் பயணங்களை தவிர்த்து தங்களது சொந்த பகுதிகளை சென்றடைய வேண்டும்” என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'பொதுச்செயலாளர் யார், பொருளாளர் யார் என்றே தெரியவில்லை'... ஆடியோ விவகாரம் - என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

தவெக உறுப்பினர் எண்ணிக்கை 1 கோடியை நெருங்கியது: தி.மு.க.-அ.தி.மு.க. அதிர்ச்சி

சைபர் க்ரைம் அதிகாரிக்கே வந்த மோசடி கால்.. அதிர்ச்சி வீடியோ..!

என்னை கொல்ல வந்தவர்களை கூட மன்னிப்பேன். துரோகிகளை மன்னிக்க மாட்டேன்: துரைமுருகன்

தயவு செய்து இறந்து விடு.. ஜெமினி ஏஐ அளித்த கட்டுரையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments