Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் கருஞ்சிறுத்தை இல்லாமல் நான் இந்தியாவுக்கு வரமாட்டேன்… உக்ரைனில் இருக்கும் இந்திய மருத்துவர்!

Advertiesment
என் கருஞ்சிறுத்தை இல்லாமல் நான் இந்தியாவுக்கு வரமாட்டேன்… உக்ரைனில் இருக்கும் இந்திய மருத்துவர்!
, செவ்வாய், 8 மார்ச் 2022 (10:22 IST)
ரஷ்யா உக்ரைன் நாட்டின் மீது படையெடுப்பை நடத்தி முக்கிய பகுதிகளை தாக்கி வருகிறது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடர்ந்துள்ள நிலையில் உக்ரைனில் உள்ள பிற நாட்டு மக்கள் சொந்த நாடுகளுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல நாட்டு மக்களும் உக்ரைனுக்கு அருகே உள்ள நாடுகளுக்கு சென்று அங்கிருந்து விமானங்கள் மூலமாக சொந்த நாடுகளுக்கு தப்பி சென்று வருகின்றனர். உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க ஆபரேசன் கங்கா திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் மூலமாக அண்டை நாடுகளுக்கு தப்பி வரும் இந்தியர்கள் விமானம் மூலமாக இந்தியா அழைத்து வரப்படுகின்றனர்.

இந்நிலையில் உக்ரைனில் மருத்துவராக செயல்பட்டு வரும் 40 வயதாகும் கிரில்குமார் என்ற மருத்துவர் தனது வளர்ப்புப் பிராணிகளான கருஞ்சிறுத்தை மற்றும் சிறுத்தை இல்லாமல் இந்தியாவுக்கு வரமாட்டேன் எனக் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்த செல்லப் பிராணிகளை வளர்த்து வரும் அவர் அந்த வளர்ப்பு மிருகங்களை எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் இப்போது தான் வசிக்கும் டாணாஸ் பகுதியில் உள்ள கிராமங்களில் இறைச்சி வாங்கி வந்து அவற்றுக்கு உணவாகக் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகலாவை கட்சியில் சேர்த்துக் கொள்வீர்களா? ஓபிஎஸ்-ன் பதில்!