Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் வரிசையில் இந்தியா முதலிடம்!

Webdunia
செவ்வாய், 26 ஜூன் 2018 (12:05 IST)
உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் உள்ளது.
 
கடந்த வருடம் ஹாலிவுட் நடிகை அலிசா மிலானோ ‘மீ டு’ என்ற தலைப்பில் ஒரு ஹேஸ்டேக்கை தொடங்கினார். அந்த ஹேஸ்டேக்கில் பிரபலங்கள் தங்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள், வன்கொடுமைகள் குறித்து பதிவு செய்து வந்தனர்.
 
இந்த  ஹேஸ்டேக் மூலம் வெளிவந்த பதிவுகளை வைத்து உலகளாவிய வல்லுநர்கள் கருத்துகணிப்பு நடத்தினர். அந்த கருத்து கணிப்பில் உலகில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத 10 நாடுகளின் பெயர்கள் இன்று வெளியிடப்பட்டன. அதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஏனென்றால், இந்தியாவில் கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தை திருமண பிரச்சனை, பெண்சிசு கொலைகள் உள்ளிட்டவை அதிகமாக நடக்கிறது.
 
இந்தியாவை அடுத்து ஆப்கானிஸ்தான் இரண்டாவது இடத்திலும், சிரியா மற்றும் அமெரிக்கா மூன்றாவது இடத்திலும், சோமாலியா, சவுதி அரேபியா, எகிப்து, கொலம்பியா, பிரேசில், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடும்பத்துக்காக தமிழக மானத்தை பாஜகவிடம் அடகு வெச்சிட்டாங்க! - திமுகவை விமர்சித்த தவெக விஜய்!

நாளை தமிழக மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், ஆரஞ்சு அலெர்ட்! - எந்தெந்த மாவட்டங்களில்?

தாஜ் மஹாலை RDX வைத்து வெடிக்கப்போவதாக மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு..!

மழை எச்சரிக்கையை மீறி சுற்றுலா! மரம் விழுந்து சிறுவன் பரிதாப பலி! - ஊட்டியில் சோகம்!

பஹல்காமில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு போர்க்குணம் இல்லை! - பாஜக எம்.பி சர்ச்சை கருத்து!

அடுத்த கட்டுரையில்