இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்பாது - தூதரகம் கறார்!

Webdunia
புதன், 11 மே 2022 (11:43 IST)
இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இந்தியா படைகளை அனுப்பாது என திட்டவட்டம். 

 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் தொடங்கி அத்தியாவசிய பொருட்கள் வரை அனைத்திற்கும் பெரும் தட்டுப்பாடு எழுந்துள்ளது.
 
அதை தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் நிலையில், ராஜபக்சே ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் வன்முறை வெடித்தது. அதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
 
கடந்த சில தினங்கள் முன்னதாக இலங்கை சிறைக்கைதிகள் சென்ற வாகனத்தை போராட்டக்காரர்கள் தாக்கினர். இதில் வாகனத்திலிருந்து தப்பி சென்ற 50க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகளை இலங்கை போலீஸார் தேடி வருகின்றனர்.
 
இந்நிலையில் அந்த சிறைக்கைதிகள் படகுகள் மூலமாக தப்பி தமிழ்நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கலாம் என்பதால் வங்க கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படையினர், தமிழ்நாடு போலீஸார் இணைந்து கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
 
இதனைத்தொடர்ந்து இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இந்தியா படைகளை அனுப்ப உள்ளதாக சமூகவலைத்தளங்களில் தகவல் பரவியது. இந்த பரவிய தகவலுக்கு இந்திய தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இலங்கையில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த இந்தியா படைகளை அனுப்பாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதுச்சேரியில் தவெக பொதுக்கூட்டம்!.. காவல்துறை போட்ட கண்டிஷன்!...

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments